2024 ஜூலை 27, சனிக்கிழமை

‛‛மாதவிடாயால் முதலிரவுக்கு மறுப்பு’’: 12 ஆவது நாளில் சிக்கல்

Editorial   / 2024 ஜூன் 02 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைதளத்தில் பழக்கமானவரை உருகி உருகி காதலித்து கரம்பிடித்த இளைஞருக்கு திருமணம் முடிந்த 12வது நாளில் பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவர் காதலித்து திருமணம் செய்தது பெண்ணை அல்ல ஒரு ஆண் என்பதை அறிந்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். இது எப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.

இன்றைய காலத்தில் காதல் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளி, கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள், ஒரே ஊரை சேர்ந்தவர்கள், அலுவலகத்தில் பணியாற்றுவோரை ஒவ்வொருவரும் காதலித்து கரம் பிடித்து வருகின்றனர். மேலும் மாமா, அத்தை வழி உறவுகளையும் பலரும் காதல் திருமணம் செய்கின்றனர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சமூக வலைதளங்களில் நண்பர்களாகி காதலர்களாக மாறியும் பலரும் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கின்றனர். இந்நிலையில் தான் சமூக வலைதள காதல் ஒருவரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது.

இந்தோனேசியாவை சேர்ந்தவர் ஏகே. இவருக்கு 26 வயது ஆகிறது. இவருக்கு சமூக வலைதளம் மூலம் அதிண்டா கான்சா என்பவர் நண்பரானார். அதிண்டா கன்சா தன்னை பெண் என அறிமுகம் செய்து கொண்டார். மேலும் தான் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் எனவும், தனது பெற்றோர் இறந்துவிட்டனர், தனியே வாழ்ந்து வருவதாகவும் ஏகேவிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் அடிக்கடி சமூக வலைதளங்களில் பேசி வந்தனர். இந்த நெருக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது.

அதன்பிறகு அவர்கள் இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு பேசி வந்துள்ளனர். அதன்பிறகு அவர்கள் இருவரும் பொதுவெளியில் சந்திக்க தொடங்கினர். இந்த சமயத்தில் அதிண்டா கான்சா உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மறைக்கும் வகையிலான நிஃப்பா உடையணிந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். அவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் எனக்கூறியிருந்ததால் அந்த உடையை அணிந்ததால் ஏகேவிற்கு சந்தேகம் எழவில்லை.

இதற்கிடையே தான் ஏகேவும், அதிண்டா கான்சாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதுபற்றி ஏகே தனது குடும்பத்தினரிடம் கூறினார். அவர்கள் ஒப்புக்கொண்ட நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் அதிண்டா கான்சாவின் குடும்பத்தினர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தான் திருமணம் முடிந்த பிறகு தான் ஏகேவின் வாழ்க்கையில் பூகம்பம் ஏற்பட்டது.

அதாவது திருமணத்துக்கு பிறகும் கூட அதிண்டா கான்சா தனது முகத்தை ஏகே மற்றும் அவரது குடும்பத்தினரிடம் காட்டாமல் இருந்த வந்தார். அதோடு மாதவிடாய் பிரச்சனையை காரணம் காட்டி தாம்பத்திய உறவையும் அவர் ஏகேவுடன் தள்ளிப்போட்டார். இதனால் ஏகேவுக்கு சந்தேகம் வலுத்தது. இதுபற்றி அவர் விசாரித்தார். அப்போது அதிண்டா கான்சா பெண் இல்லை என்பதும், அவர் ஆண் என்பதும் தெரியவந்தது. திருமணம் முடிந்த 12 வது நாளில் ஏகே இதனை கண்டுபிடித்தார்.

அதோடு ஏகேவின் சொத்துகளை அபகரிக்க அதிண்டா கான்சா திட்டமிட்டுள்ளார். இதனால் அவர் சமூக வலைதளத்தில் பெண் போன்று போலியான அக்கவுண்ட்டை உருவாக்கி ஏகேவை காதலில் வீழ்த்தி கரம் பிடித்தது தெரியவந்தது. மேலும் எந்தவித சந்தேகமும் ஏற்படாத வகையில் இஸ்லாமியர் பெண் என்ற போர்வையில் பெண்ணின் குரலில் அவர் தத்ரூபமாக பேசியதும் அம்பலமானது.

அதுமட்டுமின்றி அதிண்டா கான்சாவின் பெற்றோர் உயிருடன் இருப்பதும், அவர்களுக்கே தெரியாமல் அதிண்டா கான்சா, ஏகேவை திருமணம் செய்ததும் தெரியவந்துள்ளது. இதுபற்றி ஏகே சார்பில் பொலிஸில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்தோனேசியாவை பொறுத்தவரை இப்படி மோசடி திருமணம் செய்வோருக்கு 4 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கும் வகையில் சட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .