2025 நவம்பர் 11, செவ்வாய்க்கிழமை

மூளை இன்றி பிறந்த பெண்ணுக்கு பிறந்தநாள்

Editorial   / 2025 நவம்பர் 11 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த அலெக்ஸ் சிம்ப்ஸன் (20) என்ற இளம் பெண், தனது 20வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடியதன் மூலம் மருத்துவர்களின் கணிப்பை முறியடித்து ஒரு மருத்துவ அதிசயமாக உருவெடுத்துள்ளார்.

ஹைட்ரனென்செபாலி (Hydranencephaly) எனப்படும் அரிய நரம்பியல் கோளாறுடன் பிறந்தவர் அலெக்ஸ் ஆவார்.

இந்தக் குறைபாட்டில், மூளையின் பெரும்பகுதி இல்லாமல், அந்த இடம் மூளைத் தண்டுவட திரவத்தால் நிரப்பப்பட்டிருக்கும். அலெக்ஸ் பிறக்கும்போதே, பெரும்பாலான மூளைப் பகுதிகள் இல்லாமல் இருந்ததால், அவர் நான்கு வயதுக்கு மேல் வாழ மாட்டார் என்று மருத்துவர்கள் அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர்.

 

ஆனால், அனைத்து மருத்துவக் கணிப்புகளையும் மீறி அவர் 20 வயதை அடைந்ததற்கு, அவரது பெற்றோர் அன்புதான் காரணம் என்று கூறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X