Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2021 ஏப்ரல் 22 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா: தனது கோழிகள் முட்டையிடவில்லை என விவசாயியொருவர் பொலிஸாரிடம் புகார் அளித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
புனேவைச் சேர்ந்த விவசாயியொருவர் கோழிப்பண்ணையொன்றை நடத்தி வந்துள்ளதோடு அப் பண்ணையிலுள்ள கோழிகளுக்கு புதிய கோழித்தீவனமென்றினை வழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் ஒருவாரம் கடந்த நிலையிலும் கோழிகள் முட்டை இடவில்லை என்பதால் குறித்த தீவன நிறுவனத்தை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.
எனினும் , அந் நிறுவனத்திடமிருந்து திருப்திகரமான பதில் அளிக்கப்படாமையால் இச் சம்பவம் குறித்து அவர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
குறித்த புகாரில் கோழித்தீவனத்தை உண்ட பின் எனது கோழிகள் முட்டையிடவில்லை எனவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து விவசாயி தனது வேதனையை நூதன முறையில் வெளிப்படுத்தியதை உணர்ந்த பொலிஸார் அப்புகாரினை ஏற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
9 hours ago
03 May 2025