Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 ஜூன் 14 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில விடயங்களை காதோடு காது வைத்தாற் போல செய்துமுடித்துவிடவேண்டும். தம்பட்டம் அடித்து விளம்பரம் படுத்தினால் வினையை விலை கொடுத்து வாங்கியதாய் அமைந்துவிடும்.
இன்னும் சில விடயங்களை விளம்பரப்படுத்தாமல் செய்யவே முடியாது. ஆனால், காலவோட்டத்து ஏற்றவகையில், இவ்விரண்டையும் கையாளவேண்டும்.
விளம்பரத்தை வைத்தே பல்வேறான, சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இங்கு மட்டுமல்ல, உலகளாவிய ரீதியிலும் இடம்பெறுகின்றது.
அவ்வாறானதொரு சம்பவம் தான், பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் பகுதியில் வசிக்கும் ‘சமந்தா ஸ்டூவர்ட்‘ என்னும் 25 வயதான பெண்ணொருவரும் வளர்க்கும் இங்கிலீஷ் புல்டோக் இன நாய், ஐந்து குட்டிகளை ஈன்றுள்ளது. அக்குட்டிகளை விற்பனை செய்வதற்கு அப்பெண் விளம்பரம் செய்துள்ளார்.
எனினும், அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த மூவர், அப்பெண்ணை கத்திமுனையில் அச்சுறுத்தி விற்பனைக்காக வைத்திருந்த, 4 வாரங்களே ஆன இங்கிலீஷ் புல்டோக் இன நாய்க்குட்டிகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பெண்” நான் எனது முகநூலில் நாய் குட்டிகள் விற்பனைக்கு இருப்பதாக விளம்பரம் செய்திருந்தேன். எனினும் விளம்பரம் செய்த மறுநாளே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதால் எனக்கு நடுக்கம் ஏற்பட்டுள்ளது. என்னால் உறங்கவும் முடியவில்லை. என் வாழ்வில் நடைபெற்ற மிக மோசமான சம்பவம் இதுதான் ” எனத் தெரிவித்தார்.
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago