2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஷாருக் கான் மனைவியின் குப்பைத் தொட்டியால் பரபரப்பு

Ilango Bharathy   / 2023 மார்ச் 12 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரபல பொலிவூட் நடிகர் ஷாருக் கானின் மனைவி, ‘கெளரி கான்‘ தயாரித்த குப்பைத் தொட்டியொன்று இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பிரபல கட்டட உட்புற அழகுபடுத்துனராகத் திகழ்ந்து வரும் இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு முதல், ‘கெளரி கான் டிசைன்ஸ்‘ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இந்நிறுவனமானது வீட்டை அழகுபடுத்தும் பொருட்களை  விற்பனை செய்து வருகின்றது.

அந்தவகையில் கடந்த சில நாட்களாக  குறித்த நிறுவனத்தில் விற்கப்படும் பொருட்களின் விலைகள் இணையத்தில பெரும் பேசு பொருளாகியுள்ளது.

ஏனெனில் குறித்த விற்பனைத் தளத்தில்  ‘கெளரி கான்‘ வடிவமைத்த குப்பைத் தொட்டியொன்றின் விலை இந்திய மதிப்பில்  சுமார் 15,000 ரூபாய் எனவும், மேசை விளக்கொன்றின்  விலை சுமார் 1.5 லட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X