2025 மே 15, வியாழக்கிழமை

நீருக்கடியில் 36 மணித்தியாலங்கள் சீட்டு விளையாட்டு

Kogilavani   / 2011 மார்ச் 18 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுழியோடிகள் குழுவொன்று நீருக்கடியில் 36 மணித்தியாலயங்கள் சீட்டு விளையாட்டில் ஈடுபட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளது.

16 சுழியோடிகள் இந்த விளையாட்டில் பங்குப் பற்றியுள்ளனர். அவர்கள் கப்பலில் செயற்பட்டதால் உடனுக்குடன் ஒக்ஸீஸன் தாங்கியை மாற்றிக்கொள்ள முடிந்தது.

ஜேர்மனியின் ஜெய்ஸல்பேர்க் நகரிலுள்ள நீச்சல் தடாகமொன்றின் அடியில்  அவர்கள் 'ஷீப்ஹெட' எனும் இந்த விளையாட்டில் ஈடுபட்டனர்.  இது ஜேர்மனியில் மிகப் பிரபலமான சீட்டாட்டம் ஆகும்.

ஒழுங்கமைப்பாளரான எரிக் ஸகெல்மிக் இது குறித்து தெரிவிக்கையில் 'நாங்கள் ஒரு மணித்தியாலயத்தின் பின்னர் கணிப்பை நிறுத்திவிட்டோம். எங்களுக்குள்  யாரும் விழிப்பிதுங்குவதை விரும்பவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

தாம் செய்த சாதனையை வீடியோவில் பதிவு செய்துள்ள அந்த குழுவினர்  கின்னஸ் உலக சாதனை நூல் வெளியீட்டாளர்களுடன் தொடர்புகொள்வதற்குத்  தீர்மானித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .