2025 மே 15, வியாழக்கிழமை

முட்டைக் கோதுகளால் உருவாக்கப்பட்ட கோழி

Kogilavani   / 2011 மார்ச் 06 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரிட்டனைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் பார்வையாளர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கும் வகையில் முட்டைக் கோதுகளாலான கோழி சிற்பமொன்றை உருவாக்கியுள்ளார்.

பிரிட்டன் கிழக்கு சசெக்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த கைல் பீன் எனும் இக்கலைஞர் பல உடைந்த முட்டைக் கோதுகளை ஒன்று சேர்த்து இந்த உருவத்தை உருவாக்கியுள்ளார்.

இவர் வெவ்வேறான நிறத்திலான இந்த முட்டைக் கோதுகளை வெதுப்பகம் ஒன்றிலிருந்து சேகரித்து மிகவும் கவனமான முறையில் ஒட்டி இதனை உருவாக்கியுள்ளார்.

அவர் இந்த சிற்பம்  குறித்து தெரிவிக்கையில்,  ' கோழியா முட்டையா முதலில் வந்தது என்பது சுவாரஷ்யமான புதிராக உள்ள நிலையில் அதற்கு  நான் பதிலளிக்க விரும்பினேன். அதுதான் இந்த உருவத்தை வடிவமைப்பதற்கு என்னைத் தூண்டியது' என்றார்.

' இது மிகவும் சவால்மிக்கது என்பதும் அதேவேளை நேரத்தை விரயமாக்கும் செயல் என்பதும்  எனக்குத் தெரியும். ஆனால் நான் மிக விருப்பத்துடன் மேற்கொண்ட செயற்திட்டம் இது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .