Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 மார்ச் 14 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜேர்மனியில் பசுவின் சாணத்துடன் வெளியேறும் வாயு சிறிய பேணிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. தமது கிராமத்து 'மணத்தை' அனுபவிக்க விரும்புவர்கள் இப்பேணியிலுள்ள வாயுவை நுகர்ந்து பார்த்துக்கொள்ளலாம்.
வாயு அடைக்கப்பட்ட பேணியில் சிறிய குழாயொன்றும் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு கொள்கலனின் விலை சுமார் 1000 ரூபாவாகும். இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பும் கிடைத்துள்ளதாம்.
இதை வாங்குபவர்கள் பெரும்பாலும் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயர்ந்த மக்கள் எனக் கூறப்படுகிறது.
' கன்ட்ரிசைட் எயார் டு கோ' என்ற இத்திட்டத்தின் முகாமையாளர் இது குறித்து தெரிவிக்கையில், 'கிராமத்து மக்கள் நகர்புறங்களை நோக்கி நகர தொடங்கியுள்ளனர். அவர்கள் எப்போதும் தங்களது கிராமத்து மண்வாசனையையும் தங்களது வீட்டையும் நினைவில் கொள்ளவே விரும்புகின்றனர். அவர்களுக்காகத்தான் பசுக்களிலிருந்து வெளியேறும் வாயுவை கொள்கலன்களில் அடைத்து விற்பனை செய்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.
அதனை இலகுவாக உங்களது நாசியில் தடவினால் இணக்குமுள்ளதும் மற்றும் உண்மையான கிராமத்து மண்வாசணையை பெற்றுக்கொள்ள முடியுமென அவர் தெரிவித்தார்.
ஜேர்மனியின் அட்ல்கோபோன பவேரியாவைச் சேர்ந்த இத்திட்டத்தின் வடிவமைப்பாளரான டேனியல் டோரெர் இது குறித்து கூறுகையில், கிராமத்து மக்கள் நகர் புறங்களுக்கு வந்த மக்களுக்கு இத்திட்டம் சொந்த ஊரை நினைவூட்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
'குதிரை, கழுதை, பன்றி, என்பவற்றின் வாயுக்கள் குறித்தும் நாம் சிந்தித்தோம். ஆனால், அதிகமான நகர மக்கள் சொந்த கிராமங்களிலுள்ள பசுவின் மணத்தை நுகர்வதற்கு தவறுகின்றனர். அதனால் பசுவின் வாயுவை தெரிவு செய்தோம்' என அவர் கூறியுள்ளார்.
xlntgson Thursday, 17 March 2011 08:20 PM
பசுக்கள் அவற்றின் நெய் வாசம் மட்டும் கிராமிய சூழல் என்றால் இவர்கள் ஏமாற்றுகிறார்கள் அல்லது ஏமாற்றப்பார்க்கிறார்கள் என்றே பொருள்!
"எந்நாடு என்றாலும் நம் நாட்டைப் போல வருமா? எந்த ஊர் என்றாலும் எங்களூர் போல வருமா?" மாட்டு கட்ட இடம், நெல் கொட்ட திடல், மேய்ச்சல் தரிசு, நீர்நிலைகள் எல்லாம் நிலப்பெறுமதிக்காக விலை அதிகம் (சந்தை விலை?) கிடைக்கிறது என்பதற்காக விற்கப்பட்டால் வாசத்தைக்கூட விற்கலாம், இதெல்லாம் மண்வாசம் ஆகுமா, எங்கே, நம் பாரதி ராஜா இளைய ராஜா சேரன் செங்குட்டுவன் பாண்டியன் சங்கிலியன் எல்லாம்?
Reply : 0 0
Thilak Thursday, 17 March 2011 09:24 PM
இது நெய் வாசம் அல்ல அபாணவாயு 'வாசம்' பற்றியது
Reply : 0 0
xlntgson Saturday, 19 March 2011 08:27 PM
thilak, அபனவாயுவில் என்ன வாசம் இருக்கிறது, அப்படி என்றால் நாற்றம் என்று சொல்லலாம், அல்லவா! நறுநாற்றம் துர்நாற்றம் சுவாசிக்கும் மூக்கைப் பொருத்தது! நகரத்தவர் அதை எந்தக்காலத்தில் அதை நறு நாற்றமாகக் காண்பர்?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
14 May 2025
14 May 2025
14 May 2025