2025 மே 15, வியாழக்கிழமை

மிருகக்காட்சி சாலை விலங்குகளுக்கு செக்ஸ் தடை

Kogilavani   / 2011 மார்ச் 17 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ருமேனியா நாட்டில்  மிருகக்காட்சி சாலையொன்றிலுள்ள விலங்குகளுக்கு பாலியல் நடத்தைகளில் ஈடுபடுவதற்கு அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டமொன்றுக்கு இணங்க இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாம்.
 
ஓராடியா நகரிலுள்ள இப் பழைமையான மிருகக்காட்சி சாலையானது ஐரோப்பிய ஒன்றியத்தின் தரநிலைகளுக்கு அமைவாக இல்லை. அதனால், இந்த மிருகக் காட்சிசாலையின் வசதிகள் முன்னேற்றமடையும் வரை அங்கு புதிய மிருகங்கள் வராமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தரவை அமுல்படுத்த அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, வசதிகள் முன்னேற்றமடையும் வரை மிருகக்காட்சி சாலையை மூடி வைத்திருப்பதற்கு அதன் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. அதேவேளை அனைத்து விலங்குகளையும் தனித்தனியே வைத்திருப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது..

"பின்தங்கிய நிலையில் இருக்கும் இந்த மிருகக்காட்சி சாலை புதிய தரநிலையை அடைந்தபின் நாம் அதை திறப்பதற்கு விண்ணப்பிப்போம்.  அதன்பின் மிருகங்கள் இனப்பெருக்கம்  செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்கப்படும். அதுவரை அவை சேர்ந்திருப்பதற்கு  எந்த வாய்ப்பும் வழங்கப்பட மாட்டாது"  என மிருகக் காட்சிசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தம்முடன் தொடர்புகொண்டு, இம்மிருகக்காட்சி சாலையின் தரமானது விதிகளுக்கு அமைவாக இல்லையென அறிவித்ததையடுத்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மிருகக்காட்சி சாலையை நிர்வகிக்கும் உள்ளூராட்சி சபையின் பேச்சாளர்  கூறியுள்ளார்.
 


You May Also Like

  Comments - 0

  • xlntgson Friday, 18 March 2011 08:41 PM

    மிருக உரிமை மீறல், இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். எவ்வளவோ தடுப்பு முறைகள் இருக்கும் போது ஏன் இப்படி செய்கிறார்கள், ஒரு விதத்தில் பார்த்தால் நாய் பூனைகளுக்கு தடுப்பு மருந்து ஏற்றுவது கூட மிருக உரிமை மீறல் தான்! காடுகளை மனித நடமாற்றமில்லாமல் செய்து அங்கு கொண்டுபோய் விட்டு விடலாம். மிருக காட்சி சாலைகள் பணம் வருவாய் ஒன்றே குறியாக செயல்படுகின்றன, விற்க இயலுமென்றால் அதிகம் இனவிருத்தி செய்வது இல்லை என்றால் செக்ஸ் கூட தடை, என்ன அநியாயம், இதை எல்லாம் கேட்க நாதி இல்லையா? கொடுமை! ஐ நா உடனடியாக முடிவு செய்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .