Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 மார்ச் 22 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டனைச் சேர்ந்த நபரொருவர் கோழிகளுக்காக நட்சத்திர ஹோட்டலொன்றை உருவாக்கியுள்ளார்.
இந்த ஹோட்டலில் கோழிகள் விருந்தாக்கப்பட மாட்டாது. மாறாக, கோழிகள்தான் விருந்தினர்களாக இருக்கும். கோழிகளின் உரிமையாளர்கள் வெளியிடங்களுக்குச் செல்லும்போது கோழிகளை இங்கே தங்க வைத்துவிட்டுச் செல்லலாம். அவற்றுக்கு 5 நட்சத்திர சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டேவிட் ரொபர்ட்ஸ் என்ற 31 வயது நபரே இவ்வாறு கோழிகளுக்கான ஹோட்டலை உருவாக்கியுள்ளார்.
இவரது இந்தத் திட்டத்திற்கு கோழி வளர்ப்பு உரிமையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கோழிகளுக்கான ஹோட்டல் அமைபப்தாக கூறியதும்இ அதிகமான மக்கள் முதலில் அவர் நகைச்சுவைக்காக கூறுகிறார் என்றே எண்ணியுள்ளனர்.
ஆனால், இப்போது அவரது கோழி ஹோட்டல் வர்த்தகம் சிறப்பாக சென்றுகொண்டிருக்கின்றது. ஹேல்ஸ்டன் பிராந்தியத்திலுள்ள இந்த ஹோட்டலில் நத்தாருக்காக இந்த ஹோட்டலில் இப்போதே முன் பதிவு நடந்து வருகின்றது.
கோழிக்கூடொன்றுக்கு ஒரு இரவுக்கான கட்டணமாக 2 ஸ்ரேலிங் பவுண் அறவிடப்படுகிறது. ஒரு கோழிக்கான கட்டணம் 75 பென்னிஸ்களாகும். உணவுக்கான கட்டணமும் இதில் அடங்குமாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
14 May 2025
14 May 2025
14 May 2025