2025 மே 15, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக வாகனம் செலுத்தலுக்கு காரணமான மார்பக அழகு சிகிச்சை

Kogilavani   / 2011 மார்ச் 23 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ருமேனியாவைச் சேர்ந்த தொலைக்காட்சி நட்சத்திரமான யுவதி ஒருவர் வாகன அனுமதி பத்திரமின்றியும் ஆசனப்பட்டியை அணியாமலும் வாகனம் செலுத்தியதற்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

ஆனால் தான் மார்பகங்களை அழகுபடுத்துவதற்காக சத்திரசிகிச்சை செய்துள்ளமையே இவ்வாறு வாகனம் செலுத்தக் காரணம் என அவர் பொலிஸாரிடம் கூறினாராம்.

சிமோனா சுஹோய் எனும் 28 வயதான இப் பெண்ணுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வாகனம் செலுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததை பொலிஸார் அறிந்துள்ளனர்.

இதனால் அப்பெண் 5 வருட சிறைத் தண்டனையை தற்போது எதிர்கொண்டுள்ளார்.

புக்காரெஸ்ட் நகரை சேர்ந்த முன்னாள் பாடகியும்,  ஆடை வடிமைவமைப்பாளருமான இப் பெண் ஆசனப்பட்டி அணியாமல் வாகனம் செலுத்தியதைக் கண்ட பொலிஸார் அவரை நிறுத்தி விசாரிக்கத் தொடங்கினர். அப்போதே அவருக்கு ஏற்கெனவே வாகனம் செலுத்த தடை விதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

இது குறித்து மேற்படி யுவதி கூறுகையில்,  'நான் அந்த காரை செலுத்தியிருக்கக் கூடாது என ஏற்றுக்கொள்கிறேன்.  ஆனால் எனக்கு வேறு தெரிவுகள் ஒன்றும் இருக்கவில்லை.

நான் நெஞ்சு வலியால் சிரமம்பட்டுக் கொண்டிருந்தேன். மார்பகங்களை பெரிதாக்குவதற்காக புதிதாக சத்திரசிகிச்சை செய்துள்ளமையே இதற்கான காரணம் என நான் நினைக்கிறேன்.

நான் டெக்ஸி ஒன்றை பிடிப்பதற்கே நினைத்தேன். ஆனால் அவை மிகவும பிஸியாக காணப்பட்டன.  அதனால் நான் எனது காருக்குள்  அமர்ந்து  மருத்துவமனைக்கு  விரைந்தேன். நான் வேறு என்ன செய்யமுடியும்? என்று கூறியுள்ளார்.

வாகன விபத்தொன்றை ஏற்படுத்தியதற்காக சுஹோயின்  வாகன அனுமதி பத்திரம் ஏற்கெனவே பறிக்கப்பட்டிருந்தது.

புதிய குற்றச்சாட்டுக்கு எதிராக நீதிமன்றத்தல் வழக்குத் தொடரப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .