Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 19 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்களிடம் அடியும் உதையும் வாங்குவதற்காக வீட்டு வசதியில்லாத ஆண்களுக்கு பணம் வழங்கிய வீடியோ நிறுவனமொன்றுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஷீபைட்ஸ் என்ற பெயரில் இணையத்தளமொன்றை நடத்தி வரும் நிறுவனம் ஆண்களை பெண்கள் அடித்து உதைக்கும் வீடியோ காட்சிகளை விற்பனை செய்துவருகிறது.
இவ்வாறு அடிவாங்குவதற்காக வீடற்ற ஆண்கள் இருவருக்கு 50 அமெரிக்க டொலர்களை ஊதியமாக வழங்கியுள்ளதாக மேற்படி ஆண்களின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பீட் டவுன்ஸ்' என பெயரிடப்பட்ட இரண்டு நிமிட இந்தக் வீடீயோ காட்சிகளை மேற்படி நிறுவனம் ஆரம்பத்தில் 2.99 அமெரிக்க டொலர்களுக்கு விற்றதாகவும் பின்னர் 33.99 அமெரிக்க டொலர்களாக இதற்கு விலை அதிகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
33 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோ காட்சியொன்றில் இரண்டு பெண்கள் இணைந்து ஒரு ஆணை கண் மூடித்தனமாக அடிக்கின்றனர். இதனால் பலர் காயமடைந்தும் உள்ளனர்.
'இதனை எவ்வாறான சமூகம் அனுமதிக்கும்?' என வீடற்ற ஆண்களுக்காக வாதிடும் வழக்கறிஞர் நீல் சோனின் கேட்டுள்ளார்.
இந்த நிறுவனமானது இக்கட்டான நிலையிலுள்ளவர்களை சூறையாடுகிறது என அவர் விமர்சித்துள்ளார்.
இத்தகைய வீடியோ காட்சிகளுக்காக வீடற்ற ஆண்கள் பலரை இந்நிறுவனம் தெரிவு செய்வது வழக்கம். அவர்கள் அருகிலுள்ள நகரமொன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு பெண்களால் தாக்குதலுக்கு உட்படுத்தபடும் காட்சி படமாக்கப்படும்.
ஆண்கள் பலர் கைவிலங்கிடப்பட்டு, சாக்கினால் மூடப்பட்டும் தாக்கப்பட்டுள்ளனர் என நீல் சோனின் மற்றும் வீடற்ற ஆண்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
14 May 2025
14 May 2025
14 May 2025