Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 மே 12 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டனிலுள்ள பாடசாலையொன்றில் ஆண் மாணவர்கள் கட்டைக் காற்சட்டை அணிந்து வர தடை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 12 வயது சிறுவன் ஒருவன் பாவாடை அணிந்து பாடசாலைக்குச் செல்கிறான்.
கிறிஸ் வைட்ஹெட் என்ற மாணவனே தனது இம்பிங்டன் விலேஜ் கல்லூரிக்கு மாணவிகள் அணியும் பாவாடையை அணிந்துகொண்டு செல்கிறான்.
கேம்பிரிஜ் அருகில் உள்ள இப் பாடசாலையில் மாணவர்களின் சீருடை தொடர்பான ஒழுங்கு விதி, ஆண் மாணவர்கள் காற்சட்டை அணிந்து வருவதை தடை செய்கிறது. இந்த விதியை மாற்றுமாறு கிறிஸ் வைட்ஹெட் கோருகிறான்.
இது தொடர்பாக அவன் காலைக் கூட்டத்தில் கறுப்புநிற பாவாடை அணிந்தவாறு 1,368 மாணவர்கள் மத்தியில் உரையயொன்றையும் நிகழ்த்தியுள்ளான்.
கடும் கோடை காலத்திலும் நீண்ட காற்சட்டையை ஆண் மாணவர்களுக்கு அணிந்து வர செய்வதால் கல்வியில் கவனம் செலுத்துவதை அது பாதிப்பதாக கிறிஸ் நம்புகிறான்.
'கோடை காலத்தில் மாணவிகள் பாவாடை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றார்கள். ஆனால், ஆண்கள் மற்றும் அரைக் காற்சட்டை அணிந்து வருவதற்கு தடை செய்யப்படுகின்றனர். இது ஆண் மாணவர்களுக்கு எதிரான பாரபட்சம் என நாங்கள் கருதுகிறோம் என்று கிறிஸ் கூறியுள்ளார்.
கிறிஸின் தாயான லிஸ் வைட்ஹெட் (வயது 50) இது தொடர்பாக தெரிவிக்கையில், 'கிறிஸ் தான் நம்பும் விடயத்திற்கு ஆதரவாக செயற்படுவதை நினைத்து நான் பெருமையடைகின்றேன். உண்மையில் அந்த கொள்கையைத்தான் பாடசாலை ஊக்குவிக்கிறது. எனவே அவன் தனக்கு கற்றுக்கொடுக்கப்பட்டதைதான் செய்கிறான். பாடசாலைக்கு பாவாடை அணிந்து சென்றுவரும் தைரியத்தை நான் பாராட்டுகிறேன்' என்று கூறியுள்ளார்.
பாடசாலையில் தலைமை ஆசிரியரான ரொபர்ட் கெம்பல் இது தொடர்பாக கூறுகையில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியரகள், பெற்றோர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்தபின் 2009 ஆம் ஆண்டு புதிய சீருடை ஒழுங்குவிதி ஏற்படுத்தப்பட்டதாக கூறினார்.
கேம்பிரிட்ஜ் ஷயர் பிராந்தியத்திலுள்ள அதிக பாடசாலைகளில் இத்தகைய சீருடைகளே அணியப்படுகின்றன. ஆனால் மாணவர்கள் பாவாடை அணியலாம். அதற்கு அனுமதிப்பதால் மாணவர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுவதாக குறைகூற முடியாது' எனவும் அத் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
xlntgson Friday, 13 May 2011 09:17 PM
சிறுவனா சிறுமியா இவன்? பெரிய பேச்சு சிறுவன், நல்ல வேலை இங்கே பிறக்காமல் விட்டான். அவனை பைத்தியக்காரனாக்கி இருப்பர்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
14 May 2025
14 May 2025
14 May 2025