2025 மே 15, வியாழக்கிழமை

தேவாலயத்தில் டொப்லெஸ் மொடல்களின் உடலில் ஓவியும் வரையும் கண்காட்சி

Kogilavani   / 2011 ஜூன் 03 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆஸ்திரியாவில்  நள்ளிரவு ஆராதனையில் பங்குபற்றுவதற்காக தேவாலயமொன்றுக்கு  வந்த பக்தர்கள், ஆராதனைக்கு பதிலாக டொப்லெஸ் மொடல் அழகிகளின் உடலில் ஓவியங்களை வரையும் நேரடி கண்காட்சி நடைபெற்றதை  கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனால், வழிபாடுகளில் கலந்துக்கொள்வதற்காக வந்த பக்தர்கள் தேவாலயத்தின் குருமார்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆஸ்திரியாவின் வியன்னா நகரிலுள்;ள பழைமை வாய்ந்த கத்தோலிக்க தேவாலயமொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தேவாலய நிர்வாகிகள் நள்ளிரவு ஆராதனை, கூட்டுப் பிரார்த்தனை போன்றவற்றை கைவிட்டுவிட்டு  டொப்லொஸ் மொடல்களின் உடலில் ஓவியம் வரையும் கண்காட்சிகளை நடத்தியுள்ளனர்.

குறித்த மொடல் அழகிகள் உடல்களில் பல்வேறு வகையான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

'இந்த ஓவியங்கள், வித்தியாசமான சமய நம்பிக்கைள் தொடர்பாக கேள்விகளை எழுப்பத் தூண்டுவனவாகவும் நாம் அனைவரும் ஏதேன் தோட்டத்தில் நிர்வாணமாகவே இருந்தோம் என்பதை விளக்குவதாகவும் உள்ளன' என ஓவியர் பிரிஜிட் லின்க் என்பவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • riyas Saturday, 04 June 2011 02:33 AM

    உண்மைகள் மறைக்கப் படுவதால் மனிதர்கள் நெறி பிறழ்ந்து போகிறார்கள் .

    Reply : 0       0

    Anban Saturday, 04 June 2011 09:04 PM

    தேவாலயங்களை நிர்வாண காட்சி அரங்காக மாற்றும் பணி இது

    Reply : 0       0

    xlntgson Saturday, 04 June 2011 10:11 PM

    தஞ்சை சிற்றன்னவாசல் போன்ற இந்துக் கோயில்கள் சிலவற்றில் இதைக் காணலாம். ஆனால் அவை காம உணர்ச்சியை தூண்டுவதாக இல்லை என்பது இந்து மத பக்தர்கள் கூற்று. அதைப்போல இந்தியாவில் நிர்வாணமான பௌத்த சிலைகளும் உண்டு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .