2025 மே 15, வியாழக்கிழமை

ஐரோப்பிய விவசாயப் பெண்களின் கவர்ச்சிக் கலண்டர்

Kogilavani   / 2011 ஜூன் 04 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐரோப்பிய விவசாயப் பண்ணைகளைச் சேர்ந்த இளம் பெண்களின் கவர்ச்சி புகைப்படங்கள் அடங்கிய கலண்டர் ஒன்று தயாரிக்கப்படுகிறது.

இதற்காக  ஜேர்மனியின் ஹம்பார்க் நகரில், நடைபெற்ற படப்பிடிப்பு நிகழ்வொன்றில் நூற்றுக்கணக்கான ஐரோப்பிய  விவசாயப் பெண்கள் கலந்துகொண்டனர்.

இவர்கள் மேற்படி கலண்டருக்காக ஆடு மற்றும் மாடுகள் சகிதம் போஸ் கொடுத்துள்ளனர்.  

ஜேர்மனியின் அடுத்த முன்னணி மொடல் என்ற அர்த்தம் கொண்ட தொலைக்காட்சி தொடரொன்றில் தோன்றிய பெண்ணான பேமன் அமின், மொடல்களை தெரிவு செய்வதற்கான நடுவர்களில் ஒருவராக பணியாற்றினர்.

இதுதொடர்பாக அவர் கருத்துத்  தெரிவிக்கையில், ' உண்மையான பண்ணைகளைச் சேர்ந்த உண்மையான பெண்களை நாம் காண்பிக்க விரும்புகிறோம். அவர்கள் உண்மையில்  கவர்ச்சியான பெண்களாவர்.

துல்லியமான அளவுடைய உடலமைப்பை மாத்திரம் நாம் கவனிக்கவில்லை. பசுக்களில் எப்படி  பால் கறப்பது, விவசாய நிலங்களில் எப்படி வேலை செய்வது என்பதையும் உண்மையாக அறிந்தவர்களாக இருக்க வேண்டும்' ஏன்று தெரிவித்தார்.

2012 ஆம் வருடத்திற்கான  இந்த கலண்டருக்கு மண்வெட்டி, ஷவல், கோடாரி போன்றவற்றுடனும் பெண்கள் போஸ் கொடுத்தனர். ஜொன்னா எனும் 24  வயதான  பெண் தனது பண்ணையிலிருந்து கன்றுக்குட்டியொன்றை இந்நிகழ்வுக்கு கொண்டுவந்திருந்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .