Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஜூலை 10 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் உடலில் இயல்பாகவே உலோகப் பொருட்களை ஈர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளான்.
பிரேஸிலின் வட பகுதியிலுள்ள சிறிய நகரமான மொஸ்ரோவைச் சேர்ந்த, போலோ டேவிட் அமோரிம் எனும் 11 வயதான சிறுவனே மேற்படி விசித்திர காந்த ஈர்ப்பு சக்தியைக் கொண்டு விளங்குகிறான்.
இச்சிறுவனின் உடலில் கரண்டிகள், கத்தரிக்கோல், மற்றும் புகைப்படக் கருவி ஆகியன ஈர்க்கப்பட்டு அப்படியே ஒட்டிக்கொள்கின்றன.
'எனது மகன் திடீரென கத்தியொன்றையும் முள்ளுக்கரண்டியொன்றையும் எடுத்து வரும்படி என்னிடம் கேட்டான். நான் அவற்றை கொண்டு வந்து கொடுக்க, அவை அவனது உடலில் ஒட்டிக்கொண்டன. அதைப் பார்த்தவுடனே நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன்: என அச்சிறுவனின் தந்தை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
அச்சிறுவனை அவனின் நண்பர்கள் 'காந்தச் சிறுவன்' என அழைக்கின்றனர். அத்துடன் அவனது காந்த சக்தியை வகுப்பறையில் வெளிப்படுத்திக் காட்டும்படி அம்மாணவர்கள் கோருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போலோ டேவிட் கூறுகையில், 'எனது பாடசாலையில் ஒவ்வொருவரும் எனது உடலில் ஏதாவது ஒரு உலோகப் பொருளை பொருத்திக் காட்டும்படி கூறுகின்றனர். நான் தந்திரம் செய்வதாக அவர்கள் கருதுகின்றனர்' என தெரிவித்துள்ளான்.
இது குறித்து வைத்தியர் டிக்ஸ் செப்ட் ரோஸோடோ சோபிரினோ என்பவர் தெரிவிக்கையில், 'எனது 30 வருட கால சேவையில் இவ்வாறான விசித்திரத்தை நான் பார்த்ததில்லை. எப்படியிருப்பினும் இச்சிறுவனின் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்து எதுவும் இல்லை' என அவர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago