2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

காற்சட்டைக்குள் வைத்து வானம்பாடிப் பறவைகளை கடத்த முயன்ற நபர் கைது

Kogilavani   / 2011 செப்டெம்பர் 29 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

காற்சட்டைக்குள் மறைத்த நிலையில் டஸன் கணக்கான  வானம்பாடிப் பறவைகளை கடத்த முயன்ற நபரொருவரை தென் அமெரிக்காவிலுள்ள பிரெஞ் கயானா விமான நிலைய  சுங்கப்பிரிவினர்  கைது செய்துள்ளனர்.

நெதர்லாந்தைச் சேர்ந்த இந்நபர்,  பிரெஞ் கயானாவின்  கயீனே  விமான நிலையத்தினூடாக   இப் பறவைகளை கொண்டு செல்ல முயன்றுள்ளார்.

அவர் தனது காற்சட்டையின் முன்பகுதியில் பையொன்றை உருவாக்கி அதனுள்  மேற்படி வானம்பாடி பறவைகளை வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பறவைகள் தப்பிவிடாமல் இருப்பதற்காகவும், காற்சட்டைக்குள் அவை இருக்கின்றன என யாரும் அடையாளம் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காகவும் அந்நபர் அப்பறவைகளை  குரூரமான முறையில் தனித்தனியாக துணியில் சுற்றியுள்ளார்.

எனினும், அதிஷ்டவசமாக குறித்த மனிதரின் சந்தேகத்திற்கிடமான நடத்தையை அதிகாரிகள்  அவதானித்து,  அந்நபரின் காற்சட்டையை நீக்கி பார்த்தபோது இப்பறவைகளை  கண்டுபிடித்தனர்.

இந்தக் கடத்தல் முயற்சியானது குறித்த மனிதரால் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியல்ல.  இவர் ஏற்கெனவே இதுபோன்ற குற்றத்திற்காக தண்டனையை அனுபவித்துள்ளார்.

விமானத்தில் செல்லும்போது பலவகையான உயிரினங்களை சத்தமிடாத வகையில் காற்சட்டைக்குள் மறைத்து கொண்டுச் செல்வது உயிரினங்களை நாட்டுக்கு நாடு கடத்துவதற்கு கையாளப்படும் பிரசித்தமான சட்டவிரோத வழிமுறையாக காணப்படுகின்றது.

கடந்தமாதம் அமெரிக்காவின் புளொரிடா மாகாணத்தைச் சேர்ந்த நபரொருவர் 7 பாம்புகளையும் 3 ஆமைகளையும் தனது காற்சட்டைக்குள் வைத்து மறைத்துக் கொண்டுச் செல்லும்போது அமெரிக்க மியாமி விமான நிலையத்தில் வைத்து  கைது செய்யப்பட்டிருந்தார்.

அந்நபர் பிரேஸிலுக்கு செவல்தற்கான விமானத்தில் ஏறுவதற்கு முன்னர், ஸ்கேன் இயந்திரத்தினூடாக அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டபோது அவர் அகப்பட்டார்.


  Comments - 0

 • lankan Friday, 30 September 2011 08:11 PM

  குண்டு வைக்கறவன் எல்லாம் வெளிய இருக்க... குருவி குஞ்சுக்கு போய்... விட்டுடுங்க அப்பா. பாவம் அந்த ஆளு.

  Reply : 0       0

  xlntgson Saturday, 01 October 2011 09:22 PM

  வெட்கம் கெட்டவர்கள், இவர்களைப் போன்றவர்களால் தான்- இதனால் தான் ஆண் பெண் என்று பாராமல் எல்லாரையும் கண்ட இடத்திலும் தடவிப் பார்க்கின்றனர், விமான & சுங்க பாதுகாப்பு பிரிவினர் !

  Reply : 0       0

  theepan Saturday, 08 October 2011 12:18 AM

  என் பெண் என்றா நல்லவங்களா? எது எல்லாம் ஒரு கதை என்று பேசாம விடுங்கோ.

  Reply : 0       0

  kulathooran Friday, 30 September 2011 03:11 AM

  வித்தியாசமான மனிதர்கள், வித்தியாசமான கடத்தல்கள் பாவம் வாய் பேசா சீவன்கள்.

  Reply : 0       0

  Hot water Friday, 30 September 2011 05:38 PM

  இத்தகைய நபர்களை துணியில் சுற்றி காட்டு யானையின் வயிற்றில் கட்டிவிடவேண்டும்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .