2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஐந்து மனைவிகளால் தொடர்ச்சியான பாலியல் உறவுக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட நபர் மரணம்

Kogilavani   / 2012 ஜூலை 25 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நைஜீரியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை அவரின் ஐந்து மனைவிமார்கள் பலவந்தமாக தொடர்ச்சியாக பாலியல் உறவில் ஈடுபட வைத்து கொன்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
உரோகோ ஒனோஜா எனும் செல்வந்த வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
 
இவர் தனது 6 ஆவது மனைவியுடன் அதிக ஈடுபாடு காட்டியதால் அவரின் முதல் மனைவிகள் ஐவரும் பொறாமை கொண்டிருந்தாகவும் இதனால் தம்முடன் அடுத்தடுத்து தொடர்ச்சியாக பாலியல் உறவுகொள்ள கணவரை நிப்பந்தித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மதுபான விடுதியொன்றில் மது அருந்திவிட்டு, 6 ஆவது மனைவியுடன் உல்லாசம் அனுபவிப்பதற்காக உக்பாடிபோ நகரிலுள்ள  தனது வீட்டிற்கு அதிகாலை 3 மணியளவில் ஒனோஜோ  சென்றார்.

அவரின் நோக்கத்தை அறிந்திருந்த முதல் மனைவிகள் ஐவரும் கத்திகள் பொல்லுகளுடன் வீட்டில் காத்திருந்தனர்.

ஒனோஜோ 6 ஆவது மனைவியுடன் உல்லாசத்தை அனுபவிக்க முனைந்தவேளை அறைக்குள் புகுந்த ஏனைய 5 மனைவிமார்களும் தம்முடனும் ஒனோஜோ பாலியல் உறவுக்கொள்ள வேண்டுமென நிர்ப்பந்தித்தனர். மனைவிகளான தமக்கு இவ்வாறு கோருவதற்கு உரிமை உள்ளது என அவர்கள் கூறினர்.

அவர்களின் கோரிக்கைக்கு ஒனோஜா இணங்கினார். ஆனால் அவர் தொடர்ச்சியாக 4 மனைவிகளுடன் பாலியல் உறவு கொண்டபின்னர்,  மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமது கணவர் இறந்துவிட்டதை அறிந்ததும் முதல் மனைவிகள் ஐவரும் காட்டுப்பகுதிக்குள் ஓடிவிட்டதாக மேற்படி வர்த்தகரின் 6ஆவது மனைவி தெரிவித்துள்ளார். 

மேற்படி பெண்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  Comments - 0

  • ilmnafees Wednesday, 25 July 2012 07:34 PM

    ஹி ஹி ஹி

    Reply : 0       0

    nanban Thursday, 26 July 2012 06:26 AM

    இப்படியும் ஒரு கொலை முயற்சியா... கடவுளே!!!

    Reply : 0       0

    ibnuaboo Thursday, 26 July 2012 11:18 AM

    இப்பணக்காரர் இப்படியான சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு ஒரு அஸிஸ்டன் வைத்திருக்கலாமே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .