2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆணுறுப்பை துண்டிக்க முயன்று முன்னாள் காதலரை கொன்ற பெண்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது முன்னாள் காதலரின் ஆணுறுப்பை வெட்ட முயன்று அவரை கொலைசெய்த குற்றத்திற்காக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு 3 வருடம் மற்றும் 9 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஜியன் சென் என்ற 47 வயதுடைய பெண்ணுக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் தனது முன்னாள் காதலரான ஜின் க்ஸியோங் பெங்கை 2011 ஆம் ஆண்டு கொலைசெய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

பணம் மற்றும் இளைய மகன் தொடர்பாக இருவருக்கும் இடையில் நிலவிய சர்ச்சை காரணமாகவே இக்குற்றத்தை அவர் புரிந்துள்ளார்.

'பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு தீங்கு விளைவிப்பதற்காக பெங் தனது ஆணுறுப்பை பயன்படுத்தினார்' என ஜியன் மேலும் கூறியுள்ளார்.

'பெண்களை கவர்வதற்காகவும் குழந்தைகளை பெறுவதற்கும் அவர் ஆணுறுப்பை பயன்படுத்தினார் என்பதையும் பின்னர் பிள்ளைகள் மூலம் எம்மிடமிருந்து  பணத்தை வசூலிக்கிறார் என்பதையும் நான் அறிந்திருந்தேன்' என ஜியான் விசாரணையின்போது தெரிவித்தார்.

'இதனை செய்யுமாறு ஏதோ ஒன்று என்னை தூண்டியது. மேலும் பல சிறுவர்களுக்கு தீங்கிழைப்பதை தடுப்பதற்காக அதனை வைக்க வேண்டாமென தோன்றியது.

நான் அவரது ஆணுறுப்பை துண்டித்து அதனை எடுத்து சென்று கழிவறைக்குள் வீசியமை என் நினைவில் உள்ளது. அதன்மூலம், அவரால் மேலும் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு தீங்கிழைக்க முடியாது என நினைத்தேன்' என ஜியன் சென் மேலும் தெரிவித்துள்ளார்.

இப்பெண் தனது முன்னாள் காதலரை கொல்வதற்கு முன்பாக சூப்பொன்றில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளதாக விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.

பின்னர் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து, 'ஒருவர் இங்கு இறந்துகொண்டிருக்கிறார், அவன் எனது முன்னாள் காதலன் இவன் ஒரு கேடி' என கூறியுள்ளார்.

  Comments - 0

  • படிக்காதவன் Friday, 31 August 2012 05:50 AM

    அக்கா. நீங்க பெண்ணினத்துக்கே ஒரு முன் மாதிரி..

    Reply : 0       0

    படிக்காதவன் Friday, 31 August 2012 10:27 AM

    அக்கா, நீங்க பெண்ணினத்துக்கே ஒரு முன் மாதிரி.. இதே மாதிரி தவறு செய்யும் பெண்களுக்கும் உங்க ஸ்டைலில் ஏதாவது தண்டனை கொடுத்தால் ஆட்சேபனை தெரிவிக்க மாட்டீங்கண்டு நம்புறம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .