2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

230 பெண்களுக்காகக் குவிந்த 14,000 மணமகன்கள்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 17 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமண வரன் பார்க்கும் நிகழ்வொன்றில், 230 பெண்களை வரன் பார்க்க, 14,000 இளைஞர்கள் படையெடுத்து வந்த விநோத சம்பவம் கர்நாடகாவில் இடம்பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஆதிசுஞ்சனகிரி தொகுதியில் திருமண வரன் பார்க்கும் நிகழ்ச்சி ஒன்று அண்மையில்  நடைபெற்றுள்ளது.

அதில் சுமார் 230 பெண்கள், மணமகன் தேவை எனப்  பதிவு செய்திருந்த நிலையில், அந்நிகழ்ச்சிக்கு 14,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்திருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் நிகழ்ச்சி நடத்தியவர்கள் என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி போனதாகவும், பின்னர் இளைஞர்களிடம் பேசி அனுப்பி வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவமானது  இணையத்தில் வைரலாகி வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .