Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஒக்டோபர் 13 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிரியர் இடமாற்ற கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறு, தற்போது உள்ள ஆசிரியர் இடமாற்றத்தில் அரசியல் பாகுபாடு மற்றும் பழிவாங்கல் காணப்படுவதுடன் தற்போது உள்ள அரசாங்கத்தின் கீழ் சில அதிகாரிகள் அவர்களின் சுயலாபத்துக்காகவும் அரசாங்கத்தினுடைய ஆசிரியர் தொழிற்சங்கத்தின் நன்கிழுக்காகவும் செயல்பட்டு கொண்டு உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேச அதி கஷ்ட பிரதேசங்களில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கான இடம் மாற்றங்கள் சரியான முறையில் வகுக்கப்படவில்லை என்றும், அந்த இடமாற்றங்களில் பல குறைபாடுகள் உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பில் மாகாண கல்விப் பணிப்பாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலமாக அறிவித்திருந்தமை, அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து ஒரு மேல்முறையீட்டு இடமாற்ற சபையை கூட்டுமாறு கோரி இருந்த பொழுது, வடமாகாண கல்வி பணிப்பாளரும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரும் ஆசிரியர்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கு வாய்ப்பு அளிக்காமல், விண்ணப்பத்தை வலய கல்வி பிரிவு மாகாண கல்வி பிரிவு, ஏற்றுக்கொள்ள மல், ஆசிரியர்களை கடுமையான வார்த்தைகளால் பேசியும், அவர்களை அவமதித்து பேசி அனுப்பிய சம்பவங்களே இடம்பெற்று இருந்தது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தால் கொண்டுவரப்படும் மேல் முறையீடுகள் பரிசிலிக்க தயார் என்ற நிலையில், உடன்பட்டு வெளியே பணிப்பாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், கடிதம் அனுப்பப்பட்ட ஆசிரியர்கள் சிலரை இனங்கண்டு அரசியல் தலையிடும் மூலம் இடமாற்றம் செய்யக்கூடாது என்ற நிலைமையில், விசேட மேல்முறையீட்டு சபை ஒன்று உருவாக்கப்பட்டு, நாலு தொழிற்சங்கங்களில் ஆசிரியர்களில் 41 பேருக்கு இடமாற்றங்களில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இடமாற்ற சபைக்கு தலைமை தாங்கிய அப்போதைய மாகாண கல்விப் பணிப்பாளர் தற்போது உள்ள மேலதிக கல்வி பணிப்பாளரும் பிரெட்லீ அவர்கள், ஒரு ஆசிரியருக்கு மட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுட்டு விசேட இடமாற்ற சபை கூடி இருந்த பொழுதும், தாபன விதிக்கோவை மீறி போலியான, பழிவாங்கல் வேண்டுமென்ற அரசியல் லாபத்துக்காக அவர் செயல்பட்டுள்ளார் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்
வடமாகாண கல்வி திணைக்களத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தற்போதைய வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் தாம் ஈடுபட போவதாகவும் கருத்து தெரிவித்தனர்.
22 minute ago
30 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
31 minute ago
37 minute ago