Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 23 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கரன்
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேசத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் அமைத்து வழங்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை அமைத்து வழங்க வேண்டிய தேவை இருப்பதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி றஞ்சனா நவரத்தினம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாண்டியன்குளம் கிராம அலுவலர் பிரிவில் இந்திய அரசின் நிதி உதவித் திட்டத்தில் அமைக்கப்பட்டு கடந்த 2013ம் ஆண்டு காலப்பகுதியில் வழங்கப்பட்ட வீடுகளின் கூரைகள் சேதமடைந்தும் வீடுகள் உடைந்தும் சுவர்கள் வெடிப்புக்கு உள்ளாகியும் காணப்படுகின்றன.
குறித்த வீடுகளில் குடியிருக்க முடியாது ஆபத்தான நிலை காணப்படுவதாகவும் இந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மக்களினுடைய கோரிக்கைகள் தொடர்பாக பல்வேறு மட்டங்களில் நடைபெறுகின்ற கலந்துரையாடல்களிலும் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
21 minute ago
30 minute ago
34 minute ago