Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெடுந்தீவு பகுதியில் இளைஞர் ஒருவர் கடந்த 11 ஆம் திகதி முதல் காணவில்லை என தெரிவித்து நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 11ஆம் திகதி வீட்டிலிருந்து மதிய உணவினை உட்கொண்டு விட்டு சென்ற பின்னரே குறித்த 27 வயதான தம்பிப்பிள்ளை விதுசன் எனும் மனநலம் குன்றிய இளைஞர் இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இதேவேளை 14 ஆம் வட்டாரத்தில் அன்றைய தினம் கட்டப்பட்டிருந்த தெப்பம் ஒன்றும் காணாமல் போயுள்ளது குறித்த தெப்பத்தில் இளைஞர் தீவினை விட்டு வெளியேறியிருக்ககூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கடற்படை ஏனைய பொலிஸ் நிலையங்கள் என அனைத்திற்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைப்பவர்கள் பொலிஸாருக்கு அறிவிக்கும்படியும் நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
பு.கஜிந்தன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .