2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உவர் நீர் தடுப்பணைகள் சேதம்

Freelancer   / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பூநகரி பிரதேசத்துக்கு உட்பட்ட  கிராஞ்சி மற்றும் வேரவல் சிறுகடற் கரையோரங்களில் காணப்பட்ட உவர் நீர் தடுப்பணைகள் சேதமடைந்தமையால், ஆரம்ப காலத்தில் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த சுமார் ஆறாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளன. 

உவர் நீர்  தடுப்பணைகள் சேதமடைந்த நிலையில், அவை மீள  புனரமைக்கப்படாத நிலையில், கடல் பெருக்கு ஏற்படும் காலங்களில் கடல் நீர் புகுந்து,  உவர்நீர் பிரதேசங்களாக மாறி, இப்போது குடிநீர் அற்ற பிரதேசங்களாக காணப்படுகின்றன.

கரைச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுகளிலே அதிகளமான பிரதேசங்கள் உவர் நிலப் பிரதேசங்களாக காணப்படுகின்றன. குறிப்பாக, இந்தப் பிரதேசங்களில்  ஆரம்பத்தில் குடிநீர் கிணறுகளாக காணப்பட்ட கிணறுகள், இப்போது உவநீர்க் கிணறுகளாக மாறி வருகின்றன. குறிப்பாக, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள குஞ்சு குளம், வன்னேரி குளம், ஆணை விழுந்தான் ஆகிய பகுதிகளில் உவர்நீர் பரம்பல் அதிகளவில் காணப்படுகின்றன.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X