Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூலை 02 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்படையினர், கடந்த திங்கட்கிழமை (30)அன்று இரவு மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
அதன்படி, கடந்த திங்கட்கிழமை (30)அன்று வடமத்திய கடற்படை கட்டளை மன்னாருக்கு வடக்கே இலங்கை கடற்பரப்பில் நுழைந்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகள் பலவற்றை அவதானித்ததோடு, அந்த மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்யிலிருந்து அகற்றும் விசேட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
அங்கு இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீன்பிடி படகொன்று (01) இலங்கை கடற்படையினரால் முறையாக சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், எல்லை விதிகளை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஏழு (07) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகுகொன்றறையும் (01) இலங்கை கடற்படையினர் கைது கைப்பற்றினர்.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகுகொன்றும் (01) அதில் இருந்த ஏழு (07) இந்திய மீனவர்களும் தலைமன்னார் இறங்குத்துறறைக்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago