2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கொல்லப்படவிருந்த பசுக்ளை காப்பாற்றிய பொலிஸார்

Freelancer   / 2023 ஜனவரி 04 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன் 

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை, குடவத்தை பகுதியில் இறைச்சிக்காக வெட்டுவதற்கு வைத்திருந்த நான்கு பசு மாடுகளை பருத்தித்துறை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.

பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையிலான குழுவினரே குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டு, நான்கு பசு மாடுகளையும் காப்பாற்றியுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த பருத்தித்துறை பொலிஸார், கடந்த நாள்களில் தொடர்ச்சியாக மாடுகள் களவாடப்படுவதாகக் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும்,  குறித்த பசுக்களின் உரிமையாளர்கள், உரிய ஆதாரத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X