2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தனியார் பஸ்கள் பணிப் புறக்கணிப்பு

Freelancer   / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

அச்சுவேலி தனியார் பஸ் சாரதியையும் நடத்துநரையும் விசாரணைக்காக பொலிஸார் அழைத்து சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தனியார் பஸ் உரிமையாளர்கள்,  அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் தமது பஸ்களை நிறுத்திவைத்து, ஒரு மணி நேரம் பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

நேற்று (29)  காலை யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி வந்த 750 இலக்க வழித்தட பஸ் சாரதியை அச்சுவேலி பஸ் நிலையத்தில் நின்ற ஒருவர் தாக்கியுள்ளார். இதையடுத்து, குறித்த அரச பஸ் பொலிஸ் நிலையம் எடுத்து செல்லப்பட்டு, பாதிக்கப்பட்ட சாரதி அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்தார். 

முறைப்பாட்டுக்கு அமைய, தனியார் பஸ்ஸின் சாரதியையும் நடத்துநரையும் அச்சுவேலி பொலிஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபாத் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், குறித்த நபர்கள் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து தனியார் பஸ் சேவைகள் வழமைக்குத் தரும்பினர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X