Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஜனவரி 04 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு. தமிழ்ச்செல்வன்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக ஊடகவியலாளர் கோரிய தகவலை இம்மாதம் 25 ஆம் திகதிக்குள் வழங்கவேண்டும். தவறின் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்படும் என, இலங்கை தகவல் அறியும் ஆணைக்குழு கிளிநொச்சிபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வன், 2022 மார்ச் மாதம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அமைக்கப்பட்டு வருகின்ற மாகாண விசேட பெண் நோயியல் மருத்துவமனை தொடர்பில் தகவல்களை கோரியிருந்தார்.
ஆனால், குறித்த தகவல்களை வழங்குவதை கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை தவிர்த்திருந்தது. எனவே, இது தொடர்பில் குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கு ஊடகவியலாளரால் 29.03.2022 அன்று முறையீடு செய்யப்பட்டிருந்தது. எனவே அதற்கும் தகவல்கள் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் 30.06.2022 அன்று ஊடகவியலாளரால் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அமைய நேற்று (03) குறித்த விடயம் தொடர்பில் ‘சூம்’ வழியில் தகவல் அறியும் ஆணைக்குழு விசாரணையை மேற்கொண்டது.
இதன் போது குறித்த தகவல்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்றும் விசேட வெளிநாட்டு நிதி ஒதுக்கீடு மூலம் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் ஆகவே இதன் தகவல்கள் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் அல்லது மத்திய சுகாதார அமைச்சிடம்தான் உள்ளன என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ந. சரவணபவன் தகவல் அறியும் ஆணைக்குழுவின் முன் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த ஆணைக்குழு, சட்டத்தின் பிரகாரம் ஊடகவியலாளர் கோரிய தகவல்களை ஐனவரி 25ஆம் திகதிக்குள் உரிய இடத்தில் பெற்று வழங்குவதோடு, தமக்கும் பிரதியிட வேண்டும் என உத்தரவிட்டதோடு, தவறின் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் எச்சரித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
51 minute ago
54 minute ago
3 hours ago