Editorial / 2025 ஜனவரி 13 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்
போயா தினத்தன்று யாழில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த இடமொன்று முற்றுகையிடப்பட்டது. அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்கு பகுதியில் திங்கட்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..
போயா தினத்தன்று மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு இரகசிய தகவலொன்று கிடைத்துள்ளது.
இதற்கமைய புலனாய்வு பிரிவினரும் யாழ்.மாவட்ட போதை ஒழிப்பு பிரிவினரும் இணைந்து அப் பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர். அதன்போதே, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரும் எண்ணிக்கையில் மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மதுபானமும் சந்தேக நபரும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இவ் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago