Janu / 2025 பெப்ரவரி 10 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்ட காலமாக சட்டத்துக்கு புறம்பாக மதுபானம் விற்பனை செய்த பெண் ஒருவர் திங்கட்கிழமை (10) அன்று , 27 கால் மதுபான போத்தல்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியை சேர்ந்த சந்தேக நபரான பெண் கால் போத்தலை 1000 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பு.கஜிந்தன்
5 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago