Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஜனவரி 23 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோத மதுபான ஒழிப்பு செயற்பாட்டில் யாழ்ப்பாணம் - காரைநகர் இளம் தென்றல் விளையாட்டு கழகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் அதன் பாவனையாளர்களும் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் நோக்குடன் இளம் தென்றல் விளையாட்டு கழக இளைஞர்கள் செயற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
அவர்களால் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றை முற்றுகையிட்டு , உற்பத்தி பொருட்களுடன் ஒரு தொகை சட்ட விரோத மதுபானத்தையும் மீட்டுள்ளதுடன் , சட்டவிரோத மதுபானத்தைக் கொள்வனவு செய்து அவற்றை எடுத்துச் சென்ற இருவரை மடக்கிப் பிடித்து அவர்களைக் கடுமையாக எச்சரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எம்.றொசாந்த்
மேலும் சட்டவிரோத மதுபான ஒழிப்பு செயற்பாட்டிற்கு காரைநகர் பிரதேச சபையால் இளம் தென்றல் விளையாட்டு கழகத்திற்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
34 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
2 hours ago