Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மார்ச் 03 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடற்படை புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம்,மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மன்னார்-சிலாவத்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாசீம் சிற்றி பகுதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (2) மாலை ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு,சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா 31 கிலோ 62 கிராம் எடை கொண்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.வை.ஏ.எஸ். சந்திரபால வின் பணிப்பில்,உதவி பொலிஸ் அத்தியட்சகர் (2)போதி பக்ஸ என்பவரின் வழிகாட்டலில் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு தற்காலிக பொறுப்பதிகாரி பொ.ப .மதுரங்க,பொ.சா.74927 குணசிங்க தலைமையிலான அணியினரே மேற்படி கேரள கஞ்சா 31 கிலோ 62 கிராம் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்து உள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சவரிபுரம்,சிலாவத்துறை பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் வழக்கு பொருட்கள் மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
10 minute ago
21 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
34 minute ago