Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Janu / 2024 ஜனவரி 30 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தின் பொதுவான உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பது தொடர்பில் அமைச்சு கரிசனையாகவே உள்ளது என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தேசிய நீதிமன்றத்தில் சாதனை புரிந்த வடக்கு மாகாண வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் வர்ண இரவு நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் அமைச்சின் செயலாளராக பதவியேற்றபோது, என்னை தொடர்பு கொண்ட யாழ்ப்பாண மாவட்ட உதவி பணிப்பாளர் வினோதினி, யாழில் உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைத்து தருமாறு கோரினார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள விளையாட்டு அரங்கை அமைப்பது தொடர்பில் எமது அமைச்சு கரிசனையாகவே உள்ளது அதற்கான இடத்தையும் திட்டச் செலவுகளையும் மதிப்படுமாறு மாவட்ட உதவி பணிப்பாளரிடம் கூறியுள்ளேன்.
தற்போது அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்ற நிலையில், அமைத்தினால் பாரிய நிதிய ஒதுக்கீடுகளை மேற்கொள்வதில் சிரமம் இருக்கிறது.
ஆனாலும், யாழ்ப்பாணத்தில் உள்ள விளையாட்டு அரங்கை அமைப்பது தொடர்பில் வெளிநாட்டு நிறுவனங்கள் புலம்பெயர் கொடையாளர்களிடமிருந்து உதவிகளைப் பெறமுடியும்.
வடக்கிலிருந்து தேசியப் போட்டிகளுக்காக தெற்கு நோக்கி வருகை தரும் வீரர்கள் பல்வேறு சிரமங்கள் மத்தியில் போட்டிகளில் கலந்து கொள்வதை தொடர்ச்சியாக அவதானிக்க முடிகிறது. இவ்வாறு பல சிரமங்கள் இருந்தாலும் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் அவர்களை தேசிய நீதியில் சாதிக் வைத்துள்ளது.
நாட்டின் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அமைச்சின் புதிய செயல் திட்டமாக கிராமத்தில் இருந்து மாவட்டத்திற்கு மாவட்டத்திலிருந்து மாகாணத்துக்கு மாகாணத்தில் இருந்து தேசியம் சர்வதேசம்வரை வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு புதிய திட்டத்தினை ஒவ்வொரு பிரதேச செயலகத்திலிருந்து தயார் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
ஆகவே, யாழ்ப்பாண மாவட்ட வீரர்களுக்கு உள்ளக விளையாட்டுகளில் தேசிய நீதியில் சாதிப்பதற்கு மைதானம் இல்லை என்பது குறையாக இருந்தாலும் அதனை நிவர்த்தி செய்வதற்கு எங்களால் ஆன பங்காளிப்பை வழங்குவோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எஸ். தில்லைநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
7 minute ago
13 minute ago
27 minute ago