2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.போதனாவில் குருதி தட்டுப்பாடு

Janu   / 2023 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என இரத்த வங்கி அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் குருதி விநியோகம் அதிகரித்துச் செல்வதினால் இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாதுள்ளது. 

ஆகவே 18 - 55 வயதிற்கு இடைப்பட்ட, 50 Kg ம்  அதற்கு மேற்பட்ட நிறையும் கொண்ட ஆண் பெண் இருபாலாரும் எவ்வித பிரச்சனையுமின்றி இரத்ததானம் செய்யலாம். ஏற்கனவே இரத்ததானம் செய்தவர்கள் எவ்வித நோய்களுமின்றி இருந்தால் 60 வயது வரை இரத்ததானம் செய்யலாம். 

எனவே தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் நிறைவடைந்தவர்களும் புதிதாக இரத்ததானம் செய்ய விரும்புவர்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு வருகை தந்து இரத்ததானம் செய்து உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்களாம் எனவும் அதற்காக  .0772105375 அல்லது  0212223063 தொலைபேசி இலக்கங்களை  தொடர்பு கொள்ள முடியும் எனவும்  அறிவித்துள்ளனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X