2026 மார்ச் 12, வியாழக்கிழமை

வவுனியாவில் மரச்சட்டம் கடத்தல் முறியடிப்பு

Editorial   / 2025 ஜனவரி 09 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா மரக்காரம்பளையில் மரச்சட்டம் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது என  நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

மரக்காரம்பளை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில், புதன்கிழமை (08) மரச் சட்டங்களை ஏற்றிச் சென்ற ஜீப் ரக வாகனத்தை  நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திவுல்வெவ தலைமையிலான போக்குவரத்து பொலிஸார் சோதனை செய்த போது சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் மதிப்பிலான 72 மரச் சட்டங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் மரச் சட்டங்களை கடத்துவதற்கு  பயன்படுத்திய ஜீப் ரக வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதோடு, சாரதியையும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .