Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 24 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வடக்கு - கிழக்கில் நாளையதினம் (25) முன்னெடுக்கவுள்ள ஹர்தாலுக்கு ஆதரவு கோரி வவுனியா நகர் பகுதியில் தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து திங்கட்கிழமை (24) துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தன.
வவுனியா நகரில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கும் வவுனியா நகருக்கு வருகை தந்தவர்களுக்கும் இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் எமது இனத்திற்கு பாதகமான அதன் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு ஆதரவு கோரப்பட்டுள்ளது.
எமது இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் பேரினவாத அரசின் திட்டமிட்ட, இந்நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் வரலாற்றை சிதைக்கும் அரசின் அனைத்து கட்டமைப்புக்களின் செயற்பாட்டை எதிர்க்க இன்றைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
குறித்த துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் எம்.பியான சிவசக்தி ஆனந்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்டகிளையின் செயலாளர் ந.கருணாநிதி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
வடக்கு - கிழக்கில் ஹர்த்தால் அனுஸ்டிக்க ஆதரவு கோரி 6 கட்சிகளான
இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கட்சி,
ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன கூட்டாக கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
13 Jul 2025
13 Jul 2025
13 Jul 2025