2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

பாக்கியராசாவின் ‘வளம்மிகு மண்டூர்’ நூல் அரங்கேற்றம்

Editorial   / 2021 டிசெம்பர் 29 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வெளியீடான முதுநிலை ஊடகவியலாளர் இ.பாக்கியராசாவின் “வளம்மிகு மண்டூர்” நூல் அரங்கேற்றம், கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மண்டபத்தில், ஜனவரி மாதம் 2ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

மேற்படி ஒன்றியத்தின் ஏற்பாட்டில், பேராசிரியர் ப. சந்திரசேகரம் அரங்கில், பேராசிரியர் செ. யோகராசா தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷ்ஜானந்தா ஆன்மீக அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

 கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் வைத்திய நிபுணர் வே.விவேகானந்தராசா பிரதம விருந்தினராகவும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி இ.இராகுலநாயகி சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .