Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, திராய்மடு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்று சடுதியாக அதிகரித்து வரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்புச் செயலணி பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அதற்கமைவாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் சுகாதாரத் துறையினரால் ரபிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மண்முனை வடக்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் அன்டிஜன் பரிசோதனைகள் நேற்று (29) மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, கற்பிணிகள், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 61 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 09 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025