Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி, பொருளாதார மேம்பாட்டை கொண்டு வரவேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, வாகரைப் பகுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கும் நீரியல் பூங்கா தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில், நேற்று (16) நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடந்து கருத்து தெரிவித்த அவர், பொருளாதார மறுமலர்ச்சி அமைச்சால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அமைவாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற வளங்களைப் பயன்படுத்தி, விஷேடமாக கணியம் அதேபோன்று மீன் வளர்ப்பு, இறால் வளர்ப்பு சம்பந்தமான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.
குறிப்பாக, எங்கள் மாவட்டத்தில் இருக்கும் மீன், நண்டு, இறால் வளர்க்கக்கூடிய இடங்களை சரியாக அடையாளப்படுத்தி, முயற்சியுள்ள மக்களுக்கு பகிர்ந்தளித்து, அதேபோன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் வரவழைத்து முதலீட்டை அதிகரித்து, இதன் ஊடாக வேலை வாய்ப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
26 minute ago
43 minute ago