2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

மின்சாரம் தாக்கி நான்கு பிள்ளைகளின் தாய் மரணம்

Freelancer   / 2022 ஜூன் 15 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எச்.எம்.எம்.பர்ஸான், எம்.எம்.அஹமட் அனாம்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை துறையடி வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான அஹமது உசனார் லத்தீபா உம்மா என்பவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி இன்று புதன்கிழமை காலை மரணமடைந்துள்ளார். 

அதிகாலை 6 மணியளவில் வீட்டு வேலைகளை செய்வதற்காக வெளியில் வந்து வீட்டிற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தின் கம்பியில் கை வைத்த சமயத்தில் மின்சார ஒழுக்கு காரணமாக மின்சாரம் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மின்சாரம் தாக்கிய பெண்ணை குடும்ப உறவினர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .