2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

வீரமக்கள் தின நிகழ்வு

Johnsan Bastiampillai   / 2021 ஜூலை 18 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) 32ஆவது வீரமக்கள் தின நிகழ்வு, முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையால் நேற்றுமுன்தினம் (16)  கிரான்குளம் சீ மூன் ஹோட்டல் மண்டபத்தில் அமைதியான முறையில் கொவிட்-19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்த வீரமக்கள் தின அனுஷ்டிப்பு நிகழ்வில், முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களான ந. ராகவன், கா. கமலநாதன், க. கிருபைராஜா, மாவட்ட குழு உறுப்பினர்களான ஞா. தவராஜா, ச. அருள்ராஜா உட்பட கழக உறுப்பினர்கள், வீரமரணமடைந்த உறுப்பினர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது, புளொட் அமைப்பின் செயலதிபர் க. உமாமகேஸ்வரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அ. அமிர்தலிங்கம் ஆகியோரின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமை உணர்வுபூர்வமான நிகழ்ச்சியாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .