2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

வலையிறவு மூழ்கியது

Editorial   / 2022 நவம்பர் 09 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக மட்டக்களப்பு நகரையும் மண்முனை மேற்கு பிரதேசத்தையும் இணைக்கும்  வலையிறவு பாலத்தின் வீதியின் ஒரு பகுதி கடந்த இரு நாட்களாக நீரில் மூழ்கியுள்ளது.

மட்டக்களப்பு நகரில் இருந்து மேற்கே மண்முனை மேற்கு பிரதேசத்திற்கு செல்லும் பிரதான பாதை இதுவாகும்.

இவ்வீதி ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ள நிலையில் மக்களின் பயணங்கள் பெரும் சிரமத்துடன் மேற்கொண்டுவருவதனை காணமுடிகின்றது.

இன்று (09) பிற்பகல் இவ்வீதியால் சுமார் இரண்டு அடி நீர் ஊடறுத்து செல்வதை    காணமுடிகின்றது.

இதனால் முச்சக்கரவண்டி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணிப்போர் பெரும் அசெளகரியத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் மேலும் திறக்கப்படுமானால்  இவ் வீதியின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கரிக்கப்பட்டு மக்களின் போக்குவரத்தும் மேலும் பாதிப்படைவதற்கு வாய்ப்புள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X