2023 ஜனவரி 30, திங்கட்கிழமை

கசிப்பு உற்பத்தி: பெண் உட்பட 6 பேர் கைது

Freelancer   / 2022 நவம்பர் 27 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி        

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்பட பல இடங்களில் கசிப்பு மற்றும் கோடா என்பன சட்டவிரோதமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, துரிதமாக செயற்பட்ட பொலிஸார் பெருமளவு கசிப்பு மற்றும் கோடா போன்றவற்றை கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவங்கள் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட 6 பேரையும் சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது, கசிப்பு உற்பத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .