2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மக்கள் பிரச்சனைகளை ஆயர் தெரியப்படுத்துவார்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை வண.ஜோசப் பொன்னையா ஆண்டகையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஆயர் இல்லத்தில் நேற்று முன்தினம் (12) சந்தித்துக் கலந்துரையாடினார்.

 இதன்போது, 69ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய ஆயருக்கு, சாணக்கியன் எம்.பி பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பல விடயங்கள் தொடர்பிலும் சாணக்கியன் இதன்போது தெளிவுபடுத்தியிருந்தார்.

குறிப்பாக, விவசாயிகள் எதிர்நோக்கும் பசளைப் பிரச்சனை, காணி அபகரிப்பு, சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் மணல் அகழ்வு போன்ற விடயங்களை ஜனாதிபதி, பிரதமர் போன்றோருக்கு பொதுமக்கள் சார்பாக தெரியப்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கையை சாணக்கியன் எம்.பி முன்வைத்தார்.

அவரது கோரிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் விரைவாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குத் தெரியப்படுத்துவதாகவும் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .