Freelancer / 2022 ஜூன் 11 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நாவற்குடாவில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரணமான சம்பவம் குறித்த பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை 5.30 மணியளவில் கூலிவேலைக்குச் சென்று வீடு திரும்பிய இளைஞர் அம்மாவிடம் குளிர்பானம் வாங்கி அருந்தி விட்டு தனது வீட்டுத் தோட்டத்திலுள்ள பயிர்களுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு நின்றுள்ளார்.

அவ்வேளையில், அம்மாவிடம் பீடி வாங்கி வருமாறு கூற அம்மா கடைக்கு பீடி வாங்கச் சென்று திரும்பி வந்து பார்க்கையில் குறித்த நீர் ஊற்றிய இடத்திலேயே மூச்சின்றி இறந்து காணப்படதாக மரணமானவரின் தாய் தெரிவித்தார்.

மேலும், 31வயதுடைய ஆனந்தன் ஜெயராஜ் என்பவரே இறந்தவர் என அடையாளம் காணப்பட்ட நிலையில், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
19 minute ago
25 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
53 minute ago