2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Princiya Dixci   / 2022 ஜூலை 06 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்;.நூர்தீன்

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  சமுர்த்தி  வங்கிகளில் கடமையாற்றும்  வங்கி முகாமையாளர்கள், வங்கி அலுவலக   உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், இன்றிலிருந்து (06) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக அரச அலுவலக கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் தமது பணிகளை முன்னெடுப்பதில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, தமக்கான எரிபொருளை வழங்குமாறு கோரி, வங்கிகள் அனைத்தையும் மூடி பணிப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அலுவலக கடமைகளுக்குச் செல்லும் தமக்கும் எரிபொருளை வழங்காத பட்சத்தில் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  சமுர்த்தி  வங்கிகளில் கடமையாற்றும்  வங்கி முகாமையாளர்கள், வங்கி  அலுவலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X