2023 ஜனவரி 30, திங்கட்கிழமை

பிரேத பெட்டி கடையின் உரிமையாளர் கைவரிசை

Editorial   / 2022 நவம்பர் 13 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பூட்டிய வீடொன்றை உடைத்து கைவரிசை காட்டிய பிரேத பெட்டி விற்பனை கடையின் முன்னாள் உரிமையாளர் உட்பட இருவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வீட்டை உடைத்து, தொலைக்காட்சி பெட்டி, காஸ் சிலிண்டர், வூபர் செற் மற்றும் 27 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். அத்துடன், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்த தரகரும் அடங்குவர்.

 அவ்விருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான், சனிக்கிழமை (12) உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு நகரிலுள்ள வீட்டை பூட்டிவிட்டு ஒக்டோபர் 25ஆம் திகதியன்று குடும்பமாக வெளியூர் சென்றிருந்த அவர்கள், நவம்பர் 7 ஆம் திகதியன்று வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தமை கண்டுள்ளனர். அதன்பின்னர் தேடி​யபோதே வீட்டிலிருந்த பல பொருட்கள் களவாடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து, மேற்​கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவ்விருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். (கனகராசா சரவணன்)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .