2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கியதில் ஒருவர் மரணம்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 22 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
 
மட்டக்களப்பு  கரடியனாறு பிரதேசத்தில், யானையின்  தாக்குதலுக்கு இலக்காகி  ஒருவர் உயிரிழந்த சம்பம் நேற்று முன்தினம்  (20) இரவு இடம் பெற்றுள்ளதாகப்  பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 
 
சம்பவதினத்தன்று அப்பகுதிக்குள் வந்த காட்டுயானைகள் அங்கிருந்த தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. இதன் போது அங்கிருந்த நபர் ஒருவரும்  யானையொன்றின்  தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் கரடியனாறு கூமாச்சோலை சந்தி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய கோணேசப்பிள்ளை சிறிராம் ஜீவா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்  குறித்த சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுவருவதாகத்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .