2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

நாம் மனிதர்கள் கட்சியின் மே தின நிகழ்வுக்கு அழைப்பு

Freelancer   / 2023 மார்ச் 27 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, நாம் மனிதர்கள் கட்சி ஆகியன இணைந்து பிரமாண்டமான மே தின நிகழ்வை மட்டக்களப்பில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்கின்றன.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா இதில் பங்கேற்பார் என்று நாம் மனிதர்கள் கட்சியின் பொது செயலாளர் ஹாரீஸ் அலி உதுமா லெப்பை தெரிவித்தார்.

அரசியல், சமூக, பொதுநல வேலை திட்டங்களில் ஒருமித்தும், ஒத்துழைத்தும் எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என்று இரு கட்சிகளுக்கும் இடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையின், முதலாவது வேலை திட்டமாக மே தின நிகழ்வை ஒருமித்து நடத்த தீர்மானித்தனர் என்றும் ஹாரிஸ் அலி உதுமா லெப்பை தெரிவித்தார்.

உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்த அனைத்து தரப்புகளும், நேச சக்திகளும் இந்த மே தின நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்று நாம் மனிதர்கள் கட்சி  அழைப்பு விடுத்துள்ளது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .