2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் அலட்சியம் ஏன்?

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதில், நுகர்வோர் விலைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்  ஏன் பாராமுகமாக உள்ளனர் என  கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம் கேள்வியெழுப்பினார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பகுதிகளிலும் நுகர்வோர் விலைக் கட்டுப்பாட்டை மீறிய முறையில் பொருள்களின் விலை அதிகரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விலை அதிகரிப்பின் காரணமாக, பொருளாதார கஷ்டத்தின் மத்தியில் மக்கள மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

நாளாந்த தேவைக்குரிய அரிசி, பால்மா, பருப்பு, சீனி, மீன், சீமேந்து, உரம், கோதுமை மா, டின் மீன் மற்றும் மரக்கறி  என அனைத்தும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும் காணாதது போல் இருப்பது ஆரோக்கியமானதல்ல.

எனவே, மக்களது நிலை உணர்ந்து அரச நிர்வாகத்துக்குக் கட்டுப்பட்ட அமைச்சுக்களும் திணைக்களங்களும் குறிப்பாக, விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் அரச பிரிவு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X